மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
சின்னாளபட்டி: செம்பட்டி பசுமை குறள் அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு அம்பாத்துறை அருகே குரும்பபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான நல உதவி வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் பொற்செல்வி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் தங்கா கண்மணி, புரவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். அமைப்பின் தன்னார்வலர்கள் பிரடரிக், ஆல்பர்ட், ராமன், பால்பாண்டி மாணவர்களுக்கான திருக்குறள் புத்தகம், திருக்குறள் வினா விடை தொகுப்பு, மரக்கன்றுகள், மஞ்சப்பை, வழங்கினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜோஸ்பின்சீலி, ஜாக்குலின் லீமா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமு நன்றி கூறினார்.
27-Jan-2025