உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

 நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திண்டுக்கல்: திண்டுக்கல்- வத்தலகுண்டு ரோடு காயிதே மில்லத் திடலில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் (எஸ்.டி.டி.யூ.,) சார்பில் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஷேக் பரீத் வரவேற்றார். மேயர் இளமதி, மாநகர் காங்., தலைவர் துரை மணிகண்டன் பங்கேற்று 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். த.மு.மு.க., தலைவர் ஷேக் பரீத், இ.யூ.மு.லீ., இளைஞர் அணி செயலாளர் முகமது இலியாஸ், உறுப்பினர் சையது முகமது பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி