உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அறிவித்தும் முடங்கிய பழநி -ஈரோடு ரயில் பாதை ஏன் இந்த தாமதம்; நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே துறையினர்

அறிவித்தும் முடங்கிய பழநி -ஈரோடு ரயில் பாதை ஏன் இந்த தாமதம்; நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே துறையினர்

பழநியில் இருந்து ஈரோடு வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ரயில் பாதை திட்டம் 1922ல் ஆங்கிலேயர் காலத்தில் தயாரானது. அதன் பின் திட்டம் காலதாமதம் ஆனது. 1955 ல் இருந்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் திட்டத்திற்கான முதற்கட்ட ஆய்வு 1982 முதல் 1986 வரைநடைபெற்றது. இப்பாதை சென்னிமலை, காங்கேயம், பெருந்துறை, தாராபுரம், தொப்பம்பட்டி வழியாக பழநியை வந்தடையும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு 480 ஹெக்ேடர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதில் 91 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்க நிதி கோரப்பட்டது. 2005- 2006 பட்ஜெட்டில் திட்டம் குறித்து ஆய்வுப் பணிகள் நடைபெற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. 2008--09 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்கான நிதி சிறிய அளவில் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. ரயில் பாதையின் இறுதி வடிவம் பெறப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. 2011 பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன் பின் 2024 பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழநி- ஈரோடு ரயில் பாதை திட்டம் அமைந்தால் விவசாயம், சுற்றுலா, வியாபாரம், உட்கட்டமைப்பு ஆகியவை வளர்ச்சி அடையும். கொடைக்கானல் சுற்றுலா தளம் மேம்படும். சின்னாளப்பட்டி ஈரோடு ஜவுளி தொழில் மேம்படும். ஒட்டன்சத்திரம் உடுமலை பகுதியில் இருந்து ஈரோடு சந்தையை இணைக்க ஏதுவாக இருக்கும். இதனால் ஆயிரம் கோடிக்கு மேல் தொழில் வளம் அதிகரிக்கும். பழநி கோயிலுக்கு வட மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எளிதாக வந்து செல்வர். இதனை முறைப்படுத்த ரயில்வே துறையினர் முயற்சிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Jeya Sathees
ஆக 07, 2025 18:10

தமிழ்நாடு அரசு ஆனது மத்திய அரசுக்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு தமிழ்நாடு மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறது அப்படி என்று எடுத்துக் கொண்டால் மத்திய அரசு செய்ய வேண்டிய வேலையை உடனடியாக மக்களுக்காக ரயில் திட்டங்களை அதிகப்படியாக கொடுத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசை பிடிக்கும் பிஜேபிக்கு வாக்களிப்பார்கள் ஆனால் அப்படியும் செய்ய மாட்டேன் என்கிறார்கள் . தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று பிஜேபி அரசு மத்திய அரசோ நினைத்தால் அதிகப்படியான ரயில் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொடுக்கலாம் அல்லவா ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் கோயமுத்தூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல அதிகப்படியான ரயில் வசதிகள் இல்லை கோவை ஈரோடு திருப்பூர் வழியாக மதுரை செங்கோட்டை ராமநாதபுரம் ராமேஸ்வரம் திருச்செந்தூர் கன்னியாகுமரி காரைக்கால் டெல்டா மாவட்டங்களும் தென் மாவட்டங்களும் மக்கள் உள்நாட்டு ரயில் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள் அரசு பஸ் மற்றும் இல்லையென்றால் தனியார்கள் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் வைத்திருக்கும் ஆம்னி பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் மத்திய அரசு கண்டிப்பாக இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்


venugopal s
ஆக 07, 2025 11:11

தமிழகத்துக்கு நல்லது நடக்க வாய்ப்பே இல்லை!


rasaa
ஆக 07, 2025 10:36

சேட்டன்களின் சேட்டைகள். அதெப்படி... கேரளாவில் எந்த ஒரு சிறிய ரயில் திட்டங்களும் உடனுக்குடன் நடைபெறுகின்றது? தமிழ்நாடு என்றுமே புறக்கணித்த மாநிலம். நமது எம்.பி.க்கள் மற்ற மாநிலம் மற்ற நாடு இதுபற்றியெல்லாம் பேசுவார்கள். ஆனால் தமிழ்நாட்டைபற்றி ஒரு வார்த்தை பேசமாட்டார்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 07, 2025 07:09

இதுக்கெல்லாம் அண்ணாமலே வாயை தொறக்கமாட்டாப்புலே


சமீபத்திய செய்தி