உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் இந்த தயக்கம்; காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர்; அசட்டையில் உணவு பாதுகாப்பு துறை

ஏன் இந்த தயக்கம்; காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர்; அசட்டையில் உணவு பாதுகாப்பு துறை

மாவட்டத்தில் சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட் சியத்தால் காலாவதியான உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மசாலா பாக்கெட் , சிறுவர்கள் உண்ணும் தின்பண்டங்கள், முட்டை போன்ற உணவுப் பொருட்கள் பல மாதங்களாக விற்பனை யாகாமல் ஸ்டாக் வைத்து காலாவதி ஆனதை விற்பனை செய்கின்றனர்.இது கிராமப்புறத்தில் உள்ள கடை உரிமையாளர்களின் அறியாமையும் முக்கியகாரணமாக உள்ளது.பொருட்களை வாங்கும் சிலர் காலாவதி தேதியை கண்டுபிடித்து கடை உரிமையாளர்களை கண்டித்து செல்கின்றனர். காலாவதி தேதியை பார்க்க தெரியாதவர்கள் அறியாமையால் அந்த உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.இதனால் அவர்களுக்கு உடல் நிலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.உணவு பொருள் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் உணவு பொருட்களில் நிறுவனத்தின் பெயர், விலாசம் உள்ளிட்ட பல விஷயங்களை பெரிதாக காட்டுகின்றனர்.ஆனால் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவைகளை கண்ணுக்குத்தெரியாத வகையில் ஏதாவது ஒரு மூலையில் பாக்கெட்களில் பிரின்ட் செய்கின்றனர். சில உணவுப் பொருட்களில் காலாவதி தேதி இல்லாமல் விற்கின்றனர். இதை சாப்பிடுவதால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார துறையினர் எச்சரிக்கின்றனர்.குறிப்பாக கிராமங்களில் சிறுவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளிகளின் அருகே சிறிய கடைகள் அமைத்து காலாவதி ,கலப்பட விற்பனை அதிகமாக நடக்கிறது. கோதுமை மாவுகளில் மைதா, மிளகில் பப்பாளி விதை, சிறுதானியங்களில் மண், தின்பண்டங்களில் அதிகமான நிறமிகளை பயன்படுத்துவது என உணவு பொருளில் கலப் படம் அதிகரித்துள்ளது.உணவகங்கள், துரித உணவகங்களில் விற்பனையாகாத உணவுகளை பல நாட்கள் பிரிட்ஜ்களில் வைத்து விற்பனை செய்கின்றனர்.இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொய்வின்றி தங்கள் பணிகளை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sampath Kumar
டிச 25, 2024 11:23

நல்ல கட்டுரை இவர் சொல்வது போல கிராமமக்களிடம் விழ்ப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் உண்ணவோ பாதுகாப்பு துறை சுகாதார துறை நவீன மயம் ஆக பட வேண்டும் இதனை ஆளும் அரசுகள் தான் செய்ய வேண்டும்