உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாமல் ஏன் இந்த அலட்சியம்

வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாமல் ஏன் இந்த அலட்சியம்

மாவட்டத்தில் சிறுமலை, கொடைக்கானல், நத்தம், கன்னிவாடி, அய்யலுார், வேடசந்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக வனப்பதிகள் உள்ளன. இங்கு யானை, காட்டு மாடுகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்கின்றன. இவைகள் மழை நேரத்தில் காட்டு பகுதிகளை விட்டு வெளியேறாமல் கிடைக்கும் தண்ணீரை குடித்து விட்டு அங்கேயே வசிக்கின்றன. வனத்துறை சார்பில் ஆறுகள், குளங்கள், தண்ணீர் ஆதாரங்கள் இல்லாமல் இருக்கும் பகுதிகளில் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது. இந்த தண்ணீர் தொட்டிகளில் அடிக்கடி வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து தண்ணீர் நிரப்ப வேண்டும் . இதை வனத்துறை முறையாக கண்காணிக்காததால் வனவிலங்குகள் அடிவாரத்திற்கு படையெடுக்கின்றன. தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலை தாங்க முடியாது வன விலங்குகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருதி சிறுமலை, கன்னிவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புவதற்கான நடவடிக்கையில் துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும். இல்லையேல் தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் நிலை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை