| ADDED : நவ 19, 2025 06:11 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே நாட்டு வெடி வைத்து காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் வன எல்லை பகுதிகளில் வனச்சரகர் ராஜா தலைமையில் வனத்துறை பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது வீரலப்பட்டி , விருப்பாச்சி பகுதிகளில் சிலர் நாட்டு வெடிகளை வெடிக்க செய்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடினர். அவர்களை பிடித்து விசாரித்ததில் வீரலப்பட்டியை சேர்ந்த முத்து விஜயன் 47, கோட்டூர் செல்வராஜ் 35, வீரலப்பட்டி சிவா 32, என்பது தெரிந்தது. அகரம் பகுதியை சேர்ந்த கணேசன் 60, இவர்களுக்கான நாட்டு வெடி மருந்துகளை விற்பனை செய்தது விசாரணையில் தெரிந்தது. மூவரை கைது செய்த ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் தப்பி ஓடிய சிவாவை தேடி வருகின்றனர். வெடிபொருட்கள், கொல்லப்பட்ட இரண்டு பன்றிகளையும் பறிமுதல் செய்தனர்.