உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் மோதி பெண் பலி

டூவீலர் மோதி பெண் பலி

வடமதுரை : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நாராயண சாமி தெருவை சேர்ந்தவர்கள் ஹரி 27, முத்துப்பாண்டி 22, ஆறுச்சாமி 19. மூவரும் டூவீலரில் பழநிக்கு சென்றனர். நேற்று முன்தினம் அய்யலூர் பகுதியில் சென்றபோது தீத்தாக்கிழவனூர் மில் தொழிலாளி பாப்பாத்தி 50 மீது மோதியதில் அவர் உயிர் இழந்தார். டூவீலருடன் விழுந்த மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வட மதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி