வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Its nothing but for looting money through ward members.
திண்டுக்கல்; உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அரசியல் தலையீடுகளால் மனு கொடுக்க வருபவர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாவதாக பெண்கள் குற்றம்சாட்டினர். தமிழக அரசால் பொது மக்களுக்கான பிரச்னைகளை தீர்க்க 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 15 முதல் ஆக., 14 வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இம்முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணவும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அரசின் நலத்திட்டங்களில் விடுபட்ட, பயன்பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு மனு அளிக்க முண்டியடிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக., 14 க்குள் 112 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. இதில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. மகளிர் உரிமைத்தொகைக்காக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அதிகாரிகள் ஆட்களை பார்த்து மனுக்கள் பெற்றதுடன் கவுன்சிலரின் பரிந்துரை இருந்தால் தான் விண்ணப்பத்தை ஏற்கிறார்கள். இல்லையென்றால் விரட்டி விடுகின்றனர் என மனு அளித்த பெண்களில் சிலர் குற்றம் சாட்டினர். அவர்கள் கூறியதாவது: குறிப்பிட்ட வார்டு மக்கள் மட்டுமே மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கும் இம்முகாமில் பங்கேற்க முடியும். பிற வார்டுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது எனக்கூறி எங்களில் பாதி பெண்களை விரட்டினர். மகளிர் உரிமைத்தொகைக்கு சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே விண்ணப்பத்தை ஏற்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்றனர்.
Its nothing but for looting money through ward members.