உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர் வரத்து இல்லாத கண்மாய்களை தூர்வாரலாமே! அதிகாரிகள் கவனம் செலுத்தலாமே

நீர் வரத்து இல்லாத கண்மாய்களை தூர்வாரலாமே! அதிகாரிகள் கவனம் செலுத்தலாமே

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் நெல்,சோளம்,கரும்பு போன்ற பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் குளங்கள்,ஆறுகள்,கண்மாய்களில் வரும் நீர் ஆதாரங்களை நம்பியே விவசாயத்தில் இறங்குகின்றனர். மழைக்காலம் முடிந்து வெயில் காலம் துவங்கியிருப்பதால் தண்ணீர் உள்ள குளங்கள் அருகில் உள்ளவர்கள் மட்டும் விவசாயம் செய்கின்றனர். தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் குளங்கள்,ஆறுகளின் அருகில் உள்ளவர்கள் விவசாயம் செய்ய முடியாது கண்விழி பிதுங்கி நிற்கின்றனர். ஒரு சில குளங்களை தவிர மற்ற குளங்கள்,ஆறுகள், கண்மாய்களில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதுதவிர நீர் தேங்காமலிருக்கும் வகையில் குளக்கரைகளில் விரிசலாக உள்ளது. இதன் வழியாக மழை நேரங்களில் நீர் வெளியேறி வீணாகும் நிலை உள்ளது. சகதிகள் நிறைந்து ஆண்டுக்கணக்கில் துார்வாராமலும்,பராமரிக்காமலும் இருப்பதால் தண்ணீர் தேங்க வழியில்லாத நிலை உள்ளது. இதேநிலை பல பகுதிகளில் இருப்பதால் பெரும்பாலான விவசாய நிலங்கள் அருகே உள்ள குளங்கள் நிரம்பாமல் வறண்டு கிடக்கிறது. விவசாயிகளும் குளங்களை துார்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுக்க தான் செய்கிறார்கள். இருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. தண்ணீர் இல்லாமலிருப்பதால் பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்களும் பாதிக்கின்றன.பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்தபிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை