மேலும் செய்திகள்
குறுகலான ரோடால் தொடரும் விபத்துக்கள்
13-May-2025
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துரை சேர்ந்த டாக்டர் கொடைக்கானலில் காரில் தற்கொலை செய்து கொண்டார். அழுகிய நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர். வேடசந்துாரை சேந்தவர் ஜோஷ்வா சாம்ராஜ் 29. சேலம் தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் 2 ஆண்டு படித்து வருகிறார். ஜூன் 2ல் சேலத்திலிருந்து வேடசந்துார் வந்த டாக்டர் தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார். வேடசந்துார் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில் கொடைக்கானல் பூம்பாறை பழநி வியூ பகுதியில் சில தினங்களாக கார் ஒன்று நிற்பதாகவும் அதில் துர்நாற்றம் வீசுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பார்த்தபோது விஷ மருந்து கலந்து டிரிப் ஏற்றிய நிலையில் ஜோஷ்வா சாம்ராஜ் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். காதல் பிரச்னை, ஆன்லைன் விளையாட்டில் லட்சக் கணக்கான பணத்தை இழந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
13-May-2025