இளம் பெண்கள் பிரசாரம்
வேடசந்துார்: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நுாருல் ஈமு, அஸ்வினா ஆகிய இரு பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்தும், பெண்கள் தைரியமாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி நீலகிரியில் தங்களது பிரசாரப் பயணத்தை துவக்கினர். டூ வீலர் மூலமாக வேடசந்துார் வந்த இவர்களை காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், காங்.,வட்டார தலைவர்கள் சதீஷ், பகவான் வரவேற்றனர்.