உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலை மையப்படுத்தி மாறி மாறி மனுஇரு அரசியல் கட்சிகளால் மக்கள் குமுறல்

கோவிலை மையப்படுத்தி மாறி மாறி மனுஇரு அரசியல் கட்சிகளால் மக்கள் குமுறல்

கோவிலை மையப்படுத்தி மாறி மாறி மனுஇரு அரசியல் கட்சிகளால் மக்கள் குமுறல்ஈரோடு:ஈரோடு மாநகராட்சி ஒன்பதாவது வார்டு கிருஷ்ண நகர், குபேரன் நகர், ஆறுபடையான் நகர், அடுக்குபாறையை சேர்ந்த மக்கள், வீரப்பன்சத்திரம் போலீசில் கடந்த, 4ம் தேதி ஒரு மனு அளித்தனர். அதில், 'மாநகர தி.மு.க., நெசவாளரணி துணை அமைப்பாளர் சண்முகம், அடுக்குபாறை சின்ன மாரியம்மன் கோவிலில் தினசரி மைக் செட் போடக்கூடாது. கோவிலில் வழிபாடு செய்யக்கூடாது. சுவாமி குறித்து தவறாக பேசி, ஜாதி-மத மோதல்களை உருவாக்கும் விதமாக பேசுகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.இந்நிலையில் வீரப்பன்சத்திரம் போலீசில், சண்முகம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த ஜன.,20ல் ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணுபையன் (எ) கிருஷ்ணராஜ், கோவில் கும்பாபிஷேகம் எனக்கூறி தடை செய்யப்பட்ட கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை, 24 மணி நேரமும் ஒலிக்க விட்டார். இதுகுறித்து கடந்த, 2ல் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தேன். மறுநாள் போலீசாரும் அங்கு வந்து பார்த்தனர். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்றுமாறு கூறினர். ஆனாலும், கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்றவில்லை. இதை மனதில் வைத்துக்கொண்டு, என் மீது தவறான புகார் தரப்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விசாரித்தபோது அப்பகுதி மக்கள் கூறியதாவது: முன்னணி அரசியல் கட்சியாக இருப்பதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டு, போலீசில் மனு கொடுத்து வருகின்றனர்.இருவருக்கும் என்ன முன்விரோதமோ தெரியவில்லை. தங்கள் செல்வாக்கை காட்டிக்கொள்ள, இருதரப்பினரும் கோவிலை எதற்காக பயன்படுத்துகின்றனர் என்று தெரியவில்லை. போலீசார் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை