| ADDED : ஜூலை 29, 2024 01:16 AM
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, திரு.வி.க.வீதியில், பள்ளிகூட பஸ் ஸ்டாப்பை ஒட்டி டாஸ்மாக் கடை, பார் உள்ளது. இங்கு அடி-தடி, கொலைவெறி தாக்குதல் அடிக்கடி நடப்பதால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: டாஸ்மாக் பாரில் ஏற்கனவே கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சில தினங்க-ளுக்கு முன் பாரின் முன்புறம் நண்பர்களுக்கு இடையே அடிதடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் கடை மற்றும் பாரின் முன் கொலையும் அரங்கேறியது. கடை, பார் முன்புறம் பஸ் ஸ்டாப் உள்ளது. சில அடி துாரத்தில் அரசு பள்ளியும் செயல்படுகிறது. குடியிருப்புகளும் உள்ளன. ஆனால் டாஸ்மாக் கடை, பார் முன்புறம் சாலையின் இருபுறங்க-ளிலும் குடிமகன்கள் மாலை வேளைகளில் அமர்ந்து கொள்கின்-றனர். இதனால் சாலையில் நடந்து செல்ல மட்டுமின்றி டூவீலர்-களில் செல்லக்கூட முடியாத நிலை காணப்படுகிறது. தகாத வார்த்தைகளால் பேசுவது, தங்களுக்குள் சண்டையிட்டு கொள்-வது, இயற்கை உபாதைகளை பொது வெளியில் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சாக்கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கவர்களை வீசி செல்கின்றனர். இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாக்கடை அடைத்து கொள்-கிறது. இப்பகுதி கொலைக்கான கேந்திரமாக மாறி வருகிறது. டாஸ்மாக் கடை, பாருக்கு அருகில் தான் சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனும் உள்ளது. அவர்களுக்கும் மக்கள் பிரச்னை தெரியும். ஆனால் முறைப்படுத்த நடவடிக்கை இல்லை. எனவே டாஸ்மாக் கடையை இங்கிருந்து இடமாற்ற செய்ய வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.