மேலும் செய்திகள்
'உற்பத்தி முடியாததால் வழங்க முடியவில்லை'
10-Jan-2025
இலவச சேலை தயாரிப்பு பிப்., 10க்குள் முடிய வாய்ப்புஈரோடு,:தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்கள், அந்தியோதையா அன்ன யோஜனா திட்ட பயனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர் போன்றோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இதற்காக நடப்பாண்டில், 1 கோடியே, 77 லட்சத்து, 22,995 வேட்டிகள்; 1 கோடியே, 77 லட்சத்து, 64,471 சேலை தயாரிக்க திட்டமிடப்பட்டது. நுால் தாமதமாக வழங்கியதால் தாமதமாக தயாரிப்பு துவங்கியது. கூடுதல் விசைத்தறிகளில் நடந்த நிலையில், பொங்கலுக்கு முன் தயாரான வேட்டி, சேலை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி, ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டது. இன்னும் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.இதுபற்றி விசைத்தறியாளர் கூட்டமைப்பினர் கூறியதாவது: பொங்கல் விடுமுறை கூட இல்லாமல், விசைத்தறிகளில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்பட்டது. இருப்பினும், 95 சதவீத வேட்டி உற்பத்தி செய்து முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் மீதி வேட்டி உற்பத்தி பணி நிறைவு பெறும். 'டேமேஜை' ஆய்வு செய்து, பேக்கிங் செய்து அனுப்ப பிப்., 5க்கு மேலாகும்.அதேநேரம் இலவச சேலை உற்பத்தி, 85 சதவீதம் நடந்துள்ளது. வரும் பிப்.,10 வரை நடக்கும். 'டேமேஜ்' பார்த்து அனுப்பி வைக்க பிப்.,25 வரை ஆகும். முறையாக பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அல்லது இருப்பு வைத்து, அடுத்தாண்டு பயன்படுத்தும் சூழல் ஏற்படும். அவ்வாறு வந்தால் அடுத்தாண்டு இலவச வேட்டி, சேலை உற்பத்தியை குறைப்பார்கள். வருமாண்டுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு தனியாக நிதி ஒதுக்கி, மே முதல் ஜூன் மாதத்துக்குள் நுால் வழங்கி, உற்பத்தியை தொடங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
10-Jan-2025