உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க பொதுக்குழு

மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க பொதுக்குழு

ஈரோடு: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின், 14வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், சேலம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்மைப்பின் தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், 4 சதவீத இட ஒதுக்கீட்டை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். ரயில்களில் கட்டண சலுகை வழங்குவது போல், விமானத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். சங்கத்தின் துணைத்தலைவர்கள் முரளி, சீனிவாசன், துணை செயலாளர்கள் சக்திவேல், விவேகானந்தம், நிர்வாக அலுவலர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை