உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸ் தம்பதியை தாக்கிய நம்பியூர் தி.மு.க., பிரமுகர்

போலீஸ் தம்பதியை தாக்கிய நம்பியூர் தி.மு.க., பிரமுகர்

போலீஸ் தம்பதியை தாக்கிய நம்பியூர் தி.மு.க., பிரமுகர்நம்பியூர், :நிலத்தகராறில் போலீஸ் தம்பதியை, தி.மு.க., பிரமுகர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள குருமந்துார் மேடு, பாரதியார் வீதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் 28; கடத்தூர் போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள். இவரது மனைவி காயத்ரி 26; நம்பியூர் போலீஸ் ஸ்டேஷன் பெண் கான்ஸ்டபிள். இவர்கள் குடியிருக்கும் வீடு நத்தம் புறம்போக்கு வகையை சார்ந்தது. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தி.மு.க., பிரமுகர் பழனிசாமி. இருவரின் குடும்பத்துக்கும் நிலத்தை அளவீடு செய்வதில் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் பிரதீப் குமார் தனது வீட்டுக்கு பட்டா கேட்டு, குருமந்துார் வி.ஏ.ஓ.,விடம் மனு கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து வி.ஏ.ஓ., பழனிச்சாமி, பிரதீப்குமார் வீட்டுக்கு நேற்று சென்று விசாரித்துள்ளார். அப்போது பழனிச்சாமி, அவரது மனைவி புனிதா ஆகியோர், பிரதீப்குமார் மற்றும் காயத்ரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் காயத்ரியை கீழே தள்ளி பழனிச்சாமி தாக்கியுள்ளார். தடுத்த பிரதீப்குமாரையும் தாக்கியுள்ளார். காயமடைந்த போலீஸ் தம்பதி, கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல் பழனிச்சாமியும், போலீஸ் தம்பதி தன்னை, மனைவியை தாக்கியதாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் போலீசில் புகாரளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை