உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிகளுக்கு தொந்தரவுஇருவர் மீது போக்சோ

சிறுமிகளுக்கு தொந்தரவுஇருவர் மீது போக்சோ

சிறுமிகளுக்கு தொந்தரவுஇருவர் மீது 'போக்சோ' ஈரோடு, :சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் ஜல்லியூரை சேர்ந்தவர் சதீஸ்குமார், 23, தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்ததில் கர்ப்பமானார். குழந்தைகள் நலக்குழுவினர் புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ உள்பட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.* கோபி, நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த அரிசி மில் தொழிலாளி பிரசாந்த், 22; பெருந்துறையை சேர்ந்த, 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கினார். இதுகுறித்தும் குழந்தைகள் நல குழுவினர் பெருந்துறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். * கோபி, நாகர்பாளையம், குமுதா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் நந்தீஸ், 19; இன்ஸ்டாகிராமில் பழகிய, சத்தியை சேர்ந்த, 15 வயது சிறுமியை தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்டி விசாரித்த கோபி அனைத்து மகளிர் போலீசார், நந்தீசை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை