உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடைகளில் சோதனை; பிளாஸ்டிக் கவர், பை பறிமுதல்

கடைகளில் சோதனை; பிளாஸ்டிக் கவர், பை பறிமுதல்

கடைகளில் சோதனை; பிளாஸ்டிக் கவர், பை பறிமுதல்ஈரோடு:ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் உள்ள கடைகளில், சுகாதார ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் இரு மளிகை கடை, ஒரு சிக்கன் கடை, ஒரு பேக்கரியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், கப் என, 3 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து, ௪,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர்.இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட கொங்காலம்மன் கோவில் வீதியில், 20 கடைகளில் நடந்த சோதனையில், எட்டரை கிலோ பிளாஸ்டிக் கவரை பறிமுதல் செய்து, ௭,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர். மூன்றாம் மண்டலத்தில், 35 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், 12 கடைகளில், 12 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, ௮,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர். நான்காம் மண்டலத்தில், 35 கடைகளில் ஆய்வு செய்து, ஏழு கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, 4,300 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை