நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: நகராட்சிநிர்வாகம் அழைப்பு
காங்கேயம்,:காங்கேயம் நகராட்சி பகுதியில், வீட்டு நாய்கள் மற்றும் தெருநாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கு, ரேபீஸ் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.தெருநாய்களுக்கு கால்நடை துறையினருடன் இணைந்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி நடப்பதால், வளர்ப்பு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நாய் வளர்ப்புக்கு உரிமமும் பெற வேண்டும்.வீட்டு நாய்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பொது வெளியில் விடாமல், பாதுகாப்பான முறையில் வளர்க்கவும், நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.