உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அழகிய பழம் அழுகியதால் வந்தது கண்ணீர்

அழகிய பழம் அழுகியதால் வந்தது கண்ணீர்

'அழகிய' பழம் அழுகியதால் வந்தது கண்ணீர்அந்தியூர்:அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளான மறவன்குட்டை, பச்சம்பாளையம், சங்கராப்பாளையம், மைக்கேல்பாளையம், எண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில் முலாம்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது பரவலாக அறுவடை நடந்து வருகிறது. ஒரு கிலோ, 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கொடுத்து, தோட்டத்துக்கே நேரடியாக வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். கடந்த, 11, 12ல் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வயலில் மழை நீர் தேங்கி அறுவடைக்கு தயாராக இருந்த முலாம்பழம் அழுகியது. இதனால் ஒரு கிலோ, ௧௦ ரூபாய் முதல் 13 ரூபாய்க்கே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.இதுகுறித்து மறவன்குட்டையை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இயற்கை அடி உரம் கொடுத்து சாகுபடி செய்திருந்தேன். ஒரு ஏக்கருக்கு, ௧௦ டன் வரை அறுவடை செய்யலாம். இரண்டு நாட்களில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி பழங்கள் அழுகியதால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை