முன்விரோத தாக்குதலில் மோதல்டிரைவர் சாவு; ௨ பேருக்கு வெட்டு
முன்விரோத தாக்குதலில் மோதல்டிரைவர் சாவு; ௨ பேருக்கு வெட்டுஅந்தியூர்,அந்தியூர் அருகேயுள்ள வட்டக்காட்டை அடுத்த தோணிமடுவை சேர்ந்தவர் மாரசாமி, 40; லாரி டிரைவர். இவருக்கும் உறவினர்களுக்கும் நிலத்தகராறு உள்ளது. நேற்று மாலை வீட்டிலிருந்த மாரசாமியை, உறவினர்களான ராமன் மகன் செலம்பனன், 33; விஸ்வநாதன் மகன் தனசேகர், 30; மற்றும் கார்த்தி ஆகியோர், சராமாரியாக அடித்து உதைத்துவிட்டு தப்பியோட முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த மாரசாமி, அரிவாளால் செலம்பனன், தனசேகரை வெட்டியுள்ளார். இதில் இருவருக்கும் கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. மூவரையும் மீட்ட அப்பகுதி மக்கள், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாரசாமி இறந்தார். மற்ற இருவரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மூவரும் தாக்கியதில் உள் எலும்பு உடைந்து, அதனால் ஏற்பட்ட காயத்தால் மாரசாமி இறந்தாரா? அல்லது மாரடைப்பால் இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.