உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பதட்டமான ஓட்டுச்சாவடி பாதுகாப்பு குறித்து ஆய்வு

பதட்டமான ஓட்டுச்சாவடி பாதுகாப்பு குறித்து ஆய்வு

பதட்டமான ஓட்டுச்சாவடி பாதுகாப்பு குறித்து ஆய்வுஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பதட்டமான ஓட்டுச்சாவடிகளை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., ஜவகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.ஈரோடு கிழக்கு தொகுதியில், 237 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், ஓட்டுச்சாவடி எண்-3 - ராஜாஜிபுரம், சத்தி வீதி, மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி எண்:138, அக்ரஹார வீதியில் உள்ள மகாஜன உயர்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி எண்:167, வளையக்கார வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி எண்: 164, 165, 168, 171, 172, 173 என, ஆறு ஓட்டுச்சாவடிகள் என, ஒன்பது ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.இதில், பி.பெ.அக்ரஹாரம், ராஜாஜிபுரம், வளையக்கார வீதி, அக்ரஹார வீதி ஆகிய இடங்களில் உள்ள பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கலெக்டர் ராஜகோபால், எஸ்.பி., ஜவகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஓட்டுச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வெப் கேமராக்கள் பொருத்த யோசனை தெரிவித்தனர். அந்த வெப் கேமராக்கள், நேரலையில் தொடர்ந்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், மத்திய துணை ராணுவத்தினர் வருகை புரிந்துள்ளதால், அவர்களும் இந்த பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் நிறுத்தப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை