உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாயார் திட்டியதால் மகன் விபரீத முடிவு

தாயார் திட்டியதால் மகன் விபரீத முடிவு

தாயார் திட்டியதால் மகன் விபரீத முடிவுபவானி, :அம்மாபேட்டை அருகேயுள்ள சென்னம்பட்டி காலனியை சேர்ந்த செல்லமுத்து மகன் இளவரசன், 19; கார் மெக்கானிக். இளவரசனிடம் அவரது தாய் பொன்னி, பைப்பில் தண்ணீர் பிடித்து ஊற்றும்படி நேற்று முன்தினம் கூறியுள்ளார். தண்ணீர் பிடிக்காததால் பொன்னி திட்டியுள்ளார். இதனால் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளவரசன், பூச்சி மருந்து குடித்து விட்டு, குருவரெட்டியூர் பிரிவு அருகே மூங்கில்பாளையம் சாக்கடை வடிகால் திட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று காலை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை