மேலும் செய்திகள்
தேசிய பேரிடர் மீட்புஆலோசனை கூட்டம்
31-Jan-2025
பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம்அதிகரிக்க சி.இ.ஓ., ஆலோசனைஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் உயர்த்துவது குறித்து, உதவி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுப்பராவ் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், 218 உதவி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தனியார் பள்ளி தலைமையாசிரியர், முதல்வர், பொறுப்பாளர்களுக்கும் பொதுத்தேர்வு தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் புஷ்பராணி, பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் மோகன்குமார், பால்ராஜ், ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
31-Jan-2025