உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புகோபி:கூகலுார் கிளை வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், பாசனத்துக்கு சீரான தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனமாக, 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. 78 கி.மீ., நீளமுள்ள தடப்பள்ளி வாய்க்காலில், 36வது கி.மீ., தொலைவில், பாரியூர் அருகே உருளை என்ற இடத்தில், கூகலுார் கிளை வாய்க்கால் பிரிகிறது. 21 கி.மீ., நீளமுள்ள கூகலுார் வாய்க்கால் மூலம், 3,200 ஏக்கர் பாசனம் பெறுகிறது.கடந்த, 2024 டிச.,11 முதல், வரும் ஏப்., 9ம் தேதி வரை மொத்தம், 120 நாட்களுக்கு, இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்நீரை கொண்டு பாசன விவசாயிகள், தங்கள் வயல்களில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், பாரியூர் அருகே செல்லும், கூகலுார் கிளை வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், பாசனத்துக்கு சீராக தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.எனவே நீர்வள ஆதாரத்துறையினர், கூகலுார் கிளை வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள, ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை