உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உரிமம் பெறாமல் பட்டாசுதயாரித்த தம்பதி மீது வழக்கு

உரிமம் பெறாமல் பட்டாசுதயாரித்த தம்பதி மீது வழக்கு

உரிமம் பெறாமல் பட்டாசுதயாரித்த தம்பதி மீது வழக்குநம்பியூர்:நம்பியூரை அடுத்த எலத்துாரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 52, இவரின் மனைவி ருக்குமணி. இருவரும் செட்டியாம்பதி கிராமத்தில் உரிமம் பெற்று, திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு தயாரித்து வந்தனர். கடந்த, 2019 முதல் உரிமம் பெற்று நடத்தினர். கடந்த, 2022ல் உரிமத்தை புதுப்பிக்கவில்லை.இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் பட்டாசு தயாரிப்பதாக நம்பியூர் போலீசாருக்கு புகார் போனது. நேற்று போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, வாணம், மத்தாப்பு உள்ளிட்ட வெடிபொருட்களை தயாரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருருந்தனர். இதையடுத்து தம்பதி மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி