உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மத்திய, மாநில அரசுக்கு பேட்டியா நன்றி

மத்திய, மாநில அரசுக்கு பேட்டியா நன்றி

மத்திய, மாநில அரசுக்கு 'பேட்டியா' நன்றிஈரோடு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறையில் வர்த்தகம், முதலீடு மற்றும் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கு, கண்காட்சிகளில் அரங்கம் அமைக்க மானியம் வழங்க ஒப்புத்தல் வழங்கிய தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: பேட்டியா சார்பில் வரும் மே, 2 முதல் 5ம் தேதி வரை 'பேட்டியா பேர்--2025' தொழிற் கண்காட்சி, ஈரோட்டில் பரிமளம் மகாலில் நடக்கவுள்ளது. இதில் விற்பனை அரங்கம் அமைக்க சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு உதவிடும் வகையில், மத்திய அரசு சார்பில், 60 நபர், தமிழக அரசு சார்பில், முதல் முறையாக, 50 நபர்களுக்கும் மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பேட்டியா நன்றி தெரிவித்து கொள்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தொழில் துறை அமைச்சர் அன்பரசன், பரிந்துரைத்த வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு கூட்டமைப்பு சார்பில் நன்றி. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை