போட்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
போட்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்ஈரோடு:அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான போட்டா-ஜியோ சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய முதன்மை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தி.மு.க., அரசு அமலாக்க வேண்டும்.நிதி பற்றாக்குறையை காரணம் கூறி, 2020ல் நிறுத்தப்பட்ட சரண் விடுப்பு சலுகையை, 2026 ஏப்., 1 முதல் பணமாக்கி கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டிருப்பதை ரத்து செய்து, 2025 ஏப்., 1 முதல் பணமாக்கி கொள்ள ஆணை வழங்க வேண்டும்.தமிழக அரசு அலுவலர்களுக்கு வழங்கிய, ஏழாவது ஊதியக்குழு நிர்ணயத்தில், 21 மாத தொகை நிலுவையாக உள்ளது. அதை விடுவித்து நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். 2009 ஜூன், 1 முதல் பணியேற்று, 7 வது ஊதியக்குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு, ஓராண்டு காலம் இடைவெளியில், 15,000 ரூபாய்க்கும் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.