உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.எஸ்.பி., உள்பட 3 பேர் பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., உள்பட 3 பேர் பொறுப்பேற்பு

ஈரோடு: கோபி டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய தங்கவேல், ஈரோடு மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவுக்கு (டி.சி.ஆர்.பி.,) நியமிக்கப்பட்டார். நேற்று பொறுப்பேற்று கொண்டார். அதேசமயம் கோபிக்கு நியமிக்கப்பட்ட டி.எஸ்.பி., பணியில் சேராததால், கூடுதலாக கோபி டி.எஸ்.பி.,யாகவும் பணியாற்ற தங்கவேலுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.* நம்பியூர் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நிர்மலா, கோவை மாவட்டம் சிறுமுகைக்கு மாறுதல் செய்யப்பட்டார். பொள்ளாச்சி, நெகமம் இன்ஸ்பெக்டர் ரவி, நம்பியூருக்கு நியமிக்கப்பட்டார். நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.* புன்செய்புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், ஈரோடு தாலுகா ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டார். நீலகிரி, சேரம்பாடி இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், புன்செய்புளியம்பட்டிக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை