மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
21-Aug-2024
ஈரோடு: ஈரோடு, மூலப்பாளையம், பூந்துறை ரோட்டில், மாநகராட்சி நான்காவது மண்டல சுகாதார ஆய்வாளர் கதிரேசன் தலைமையி-லான குழுவினர், நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். டீக்-கடை, பேக்கரி என, 12 கடைகளில் நடந்த சோதனையில், 5 டீக்-கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப் பயன்ப-டுத்தப்பட்டது தெரிந்தது. ஐந்து கடைகளுக்கும் தலா, ௫௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த கடைகளில் இருந்து, 13 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இனி பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால், உரிமம் ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்தனர்.
21-Aug-2024