உயர்வுக்கு படி முகாம் ௯ம் தேதி முகாம் ௧௧க்கு மாற்றம்
ஈரோடு: நான் முதல்வன் திட்டத்தில் 'உயர்வுக்கு படி 2024' முகாம் நடக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த, 2022-23, 2023-24ம் கல்வி ஆண்டில் உயர் கல்வி தொடராத, பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வி தொடர்வதற்கு ஏதுவாக, 'உயர்வுக்கு படி 2024' முகாம், ஈரோடு மற்றும் கோபியில் இரண்டு கட்டமாக நடக்க உள்ளது. ஈரோடு வருவாய் கோட்டத்தில், வரும் 9 மற்றும் 19; கோபி வருவாய் கோட்டத்தில் வரும் 12 மற்றும், 23 தேதிகளில் நடக்க உள்ளது. உயர் கல்வி தொடராத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ அணுகி முகாமில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஈரோடு வருவாய் கோட்டத்துக்கான, ௯ம தேதி அறிவிக்கப்பட்ட முகாம் மட்டும், 11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கல்வி கடன் வழங்கும் லோன் மேளா, கலெக்டர் அலுவலகத்தில் 9ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவும், ௧௧ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.