உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் அசோசியேஷன் கூட்டம்

எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் அசோசியேஷன் கூட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் அசோசியேஷன், 32வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும். பீக் அவர் என தனியே மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். சூரிய ஒளி மின் உற்பத்துக்கு நெட்வொர்க் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்க வேண்டும். மின் கட்டணத்தை ஆண்டுதோறும், 6 சதவீதம் உயர்த்தப்படும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை