உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாய இடுபொருட்களை ஏற்றி வந்த வாகனத்துக்கு அனுமதி மறுப்பு; வனத்துறையை கண்டித்து மறியல்

விவசாய இடுபொருட்களை ஏற்றி வந்த வாகனத்துக்கு அனுமதி மறுப்பு; வனத்துறையை கண்டித்து மறியல்

பவானிசாகர்: பவானிசாகர் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி தெங்குமரஹாடா, அல்லி மாயாறு, கல்லாம்பாளையம் வன கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் விவசாய நிலங்களில் வாழை, பூசணி, மர-வள்ளி, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். விவ-சாய பணிகளுக்கு தேவையான பொருட்களை வாகனம் மூலம், பவானிசாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காராச்சிக்கொரை வன சோதனைச்சாவடி வழியாக கொண்டு செல்வது வழக்கம். இந்நி-லையில் தெங்குமரஹாடா கிராம விவசாயி ஒருவர், கோவையிலி-ருந்து விவசாய இடுபொருட்கள் மற்றும் கொட்டகை அமைப்ப-தற்கான தளவாட பொருட்களை ஈச்சர் வாகனத்தில் ஏற்றிக்-கொண்டு நேற்று மதியம் வந்துள்ளார்.அப்போது வெளியூர் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி-யில்லை எனக்கூறி, காராச்சிக்கொரை வன சோதனைச் சாவடியில் பணியில் இருந்த வனத்துறையினர் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம் பாளையம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சோதனைச்சாவடியை முற்றுகை-யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வனச்சரகர் தீனதயாளனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சோதனைச்சாவடி முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 5 மணி நேரத்-திற்கு மேல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டும் வனத்துறை-யினர் அனுமதிக்கவில்லை. இதனால் இரவு, 7:௦௦ மணி அளவில் விவசாய பொருட்கள் ஏற்றி வந்த வாகனம் திரும்பி சென்றது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:வெளியூர்களில் இருந்து விவசாய இடுபொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு, வன சோதனைச் சாவடியில் அனுமதி அளிக்குமாறு, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட வன அதிகாரியிடம் வழங்கியுள்ளோம். ஆனாலும் வாக-னங்கள் செல்ல அனுமதி மறுக்கின்றனர். விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறுப கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை