உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கழிவு நீருடன் லாரி பறிமுதல்

கழிவு நீருடன் லாரி பறிமுதல்

ஈரோடு: தோல் தொழிற்சாலை ரசாயனக்கழிவு நீரை கொண்டு வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியில் தோல் தொழிற்சாலை ரசாயனக்கழிவுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. சத்தி ரோடு நரிப்பள்ளம் ஓடையில் கழிவு நீரை லாரியில் இருந்து திறந்து விட்டபோது, அப்பகுதியினர் வந்து லாரியை முற்றுகையிட்டனர். மரவாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வரவிகுமாரை பிடித்து வைத்தனர்.வீரப்பன்சத்திரம் போலீஸார் அங்கு வந்து, லாரியை பறிமுதல் செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். டிரைவர் செல்வரவிகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.லாரி டேங்கரில் உள்ள துளைகள் வழியே, தோல் தொழிற்சாலை கழிவு நீர் ஒழுகி, ஸ்டேஷனை சுற்றிதேங்கியுள்ளதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை