உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:அகில இந்திய பி.எஸ்.என்.எல்., - டி.ஓ.டி., ஓய்வூதியர் சங்க ஈரோடு மாவட்ட கிளை சார்பில், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐ.டி.ஏ., சம்பள விகிதத்தில், 15 சதவீத பிட்மெண்டுடன் பென்சன் மாற்றத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் குப்புசாமி, மாநில துணை செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ