உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.டி.ஓ., டிரைவர் பலி

பி.டி.ஓ., டிரைவர் பலி

பி.டி.ஓ., டிரைவர் பலிகாங்கேயம்:காங்கேயம், முல்லை நகரை சேர்ந்தவர் சத்ய நாராயணன், 54; காங்கேயம் பி.டி.ஓ.,வின் டிரைவர். இவரின் மனைவி ஈஸ்வரி. இருவரும் கடந்த, 18ம் தேதி பிளாட்டினா பைக்கில் காங்கேயம்-கரூர் சாலை முத்துார் பிரிவில் சென்றனர். அப்போது எதிரே சுரேஷ், 29, ஓட்டிவந்த லாரி பைக் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சத்ய நாராயணன் இறந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ