மேலும் செய்திகள்
கஞ்சா வழக்கில் ௨ பேர் மீது குண்டாஸ்
24-Feb-2025
யூரியா கடத்தியவர் மீதுபாய்ந்தது 'குண்டாஸ்'ஈரோடு:மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியாவை பதுக்கி விற்பனை செய்த, பவானி, பசுவேஸ்வரர் கோவில் வீதியை சேர்ந்த அகமது அலியை, 54, வேளாண் துறையுடன், குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை போலீசார் எஸ்.பி., பாலாஜி சரவணன் மூலம், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவுக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் ஏற்றுக்கொண்டதால், அகமது அலி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அகமது அலி அடைக்கப்பட்டார்.
24-Feb-2025