உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காசநோய் தின மனித சங்கிலி

காசநோய் தின மனித சங்கிலி

காசநோய் தின மனித சங்கிலிஈரோடு:உலக காசநோய் தினத்தையொட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், விழிப்புணர்வு மனித சங்கிலியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார். முன்னதாக காசநோய் இல்லாத பஞ்.,களை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர். பேரோடு, கராண்டிபாளையம், மூங்கில்பாளையம் உட்பட, 10 பஞ்.,களுக்கு காசநோய் இல்லா பஞ்சாயத்துக்கான பாராட்டு சான்று, பரிசு வழங்கப்பட்டது.மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (காசநோய்) ராமசந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, துணை இயக்குனர்கள் (தொழுநோய்) ரவீந்திரன், (குடும்ப நலம்) டாக்டர் கவிதா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ