உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சின்ன மாரியம்மன் கோவில்தேரோட்டம் கோலாகலம்

சின்ன மாரியம்மன் கோவில்தேரோட்டம் கோலாகலம்

சின்ன மாரியம்மன் கோவில்தேரோட்டம் கோலாகலம்ஈரோடு:ஈரோடு, சின்னமாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்.ஈரோட்டில், பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் குண்டம், தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் குண்டம் விழா காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடந்தது. நேற்று காலை பொங்கல் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள், தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து, அதனை அம்மனுக்கு படைத்தனர். இதற்கிடையில் சின்ன மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 9:30 மணியளவில் தேரோட்டம் துவங்கியது.கோவிலுக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜை, திருஷ்டி பூஜை முடிந்த பின், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின்போது இருபுறம் சுற்றி நின்றிருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு, தேரில் வந்த அம்மனை வழிபட்டனர். திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி