உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆர்.டி.ஐ., ஆணையர் ஈரோட்டில் விசாரணை

ஆர்.டி.ஐ., ஆணையர் ஈரோட்டில் விசாரணை

ஈரோடு மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி தலைமையில், தகவல் பெறும் உரிமை சட்டத்தில், 2வது மேல் முறையீட்டு மனு, புகார் மனுக்கள் மீதான விசாரணை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கூட்டுறவு, பள்ளி கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, வட்ட வழங்கல் துறை அலுவலர் கள், மனுதாரர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், மனுதாரர் கோரும் தகவல், தங்கள் அலுவலகம் சார்ந்தது அல்ல என்றால், ஐந்து நாட்களில் உரிய பொது தகவல் அலுவலருக்கு விபரம் அனுப்ப வேண்டும். மனுதாரர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு மேல்முறையீட்டு அலுவலர் பெயர், முகவரி குறிப்பிட்டு தெரிவிக்கவும் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !