உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயி வீட்டில் பணம்,2 பவுன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் பணம்,2 பவுன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் பணம்,2 பவுன் நகை திருட்டுதாராபுரம்:தாராபுரம் அருகே, வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், நகை, பணத்தை திருடி சென்றனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த வினோபா நகரை சேர்ந்தவர் மோகனகுமாரசாமி, 54. இவர், நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் மணக்கடவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த இரண்டு பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.* தாராபுரம் அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 62. இவர், நேற்று காலை தோட்டத்திற்கு சென்று விட்டு, மதியம் வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த முக்கால் பவுன் நகை திருட்டு போயிருந்தது.தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ