நாய்கள் கடித்ததில் 30 ஆடுகள் பலி தாராபுரம் அருகே பரபரப்பு
தாராபுரம்: தாராபுரம் அருகே நாய்கள் கடித்ததில், 30 ஆடுகள் பலியானது.தாராபுரத்தை அடுத்த மூலனுார், கருப்பன் வலசை சேர்ந்தவர் பிரகாஷ், 37; தோட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று அதிகாலை சென்றபோது, பட்டிக்குள் இருந்த ஆடுகளில், 18 குட்டிகள் உள்பட, 30 ஆடுகள் காயங்களுடன் இறந்து கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். தெருநாய்கள் கடித்ததில் பலியானதாக தெரிகிறது. ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.