இலக்கை விஞ்சி 40,041 விவசாயிகள்வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிவு
இலக்கை விஞ்சி 40,041 விவசாயிகள்வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிவுஈரோடு:அரசின் நல திட்டங்கள் முறையாக விவசாயிகளுக்கு செல்வதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு 'வேளாண் அடுக்ககம்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போல் தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது. வருங்காலங்களில் இந்த எண்ணின் அடிப்படையில் மட்டுமே, மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மை சார்ந்த திட்ட பலன் மற்றும் பயிர் கடன்கள் வழங்கப்படும். இதற்காக விவசாயிகளின் தரவுகள் சேகரிக்க சிறப்பு முகாம், ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 8ம் தேதி முதல் நடத்தப்பட்டு வரப்படுகிறது. இதில் மாவட்டத்தில் நேற்று வரை, 40,041 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு உடனுக்குடன் சென்றடைவதை இந்த திட்டத்தால் உறுதிப்படுத்த முடியும். பேரிடர் காலங்களில் பயிர் சேத இழப்பீடு தொகை, அரசு திட்டங்களின் மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு தாமதமின்றி வரவு வைக்க முடியும். கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் எளிய முறையில் பயிர்க்கடன் பெற வழிவகுக்கும். மாவட்டத்தில் இத்திட்டத்தில் இதுவரை, 40,041 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அதாவது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.