இரும்பு தளவாடம் பெயரில் மோசடி செய்ததாக புகார்
ஈரோடு: சேலம், சாமிநாதபுரம் மெயின் ரோடு, ஸ்ரீராஜலட்சுமி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குனர் சித்துராஜ், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் வழங்கிய புகார் மனுவில் கூறியதாவது:நாங்கள் இரும்பு தளவாட பொருட்களை, நேரடி மற்றும் இணைய வழி ஆர்டரில் விற்கிறோம். கடந்த, 2015ல் ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம், கடன் அடிப்படையில், 31.46 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்து, 5 காசோலை வழங்கினர். அவற்றை வங்கியில் செலுத்தியபோது, போதிய பணமின்றி திரும்பியது. இதுபற்றி நேரில் விசாரித்தபோது, வேறு முகவரியில் இயங்கியதும், நேரில் சென்று கேட்டபோது பணம் தர முடியாது என்று, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.