உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: சமூக நீதி கூட்டமைப்பு சார்பில், சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் கணகுறிஞ்சி தலைமை வகித்தார். ஆதிதமிழர் பேரவை நிறுவன தலைவர் அதி-யமான், தி.க., துணை பொது செயலர் மதிவதனி பேசினர்.மும்மொழி பாடத்திட்டம் எனக்கூறி தமிழகத்துக்கான கல்வி தொகையை வழங்க மறுப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். யு.ஜி.சி., விதிகளை திருத்தி, கவர்னருக்கே அனைத்து அதிகாரத்தையும் தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பல்வேறு அமைப்பை சேர்ந்த சண்-முகம், ரத்தினசாமி, நிலவன், சிந்தனை செல்வன், பொன்னையன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை