| ADDED : ஜூலை 04, 2024 07:21 AM
ஈரோடு : டெலிகிராமில், பகுதி நேர வேலை என ஆசை காட்டி, ரூ.13 லட்சத்தை ஏமாற்றி பெற்று மோசடி செய்த புரோக்கர் இருவர் கைது செய்யப்பட்டனர். ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ண பிரசாத், சத்தியை சேர்ந்த செந்தில் குமார் ஆகியோர், ஈரோடு சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:ஆன்லைனில் டெலிகிராம் மூலமாக பகுதி நேர வேலை உள்-ளது. அதிக வருவாய் ஈட்டலாம் என எஸ்.ஆர்.கே. அசோ-சியேட்ஸ், எஸ்.ஆர்.கே. குளோபல் டெக் என்ற பெயரில் அறி-விப்பு வெளியானது. இதை நம்பி வர்த்தகம் செய்தோம். துவக்-கத்தில் ஓரிரு முறை டெலிகிராமில் வந்த வங்கி கணக்கு எண்-ணுக்கு பணம் அனுப்பினோம். வருவாய் கிடைத்தது. இதனால் அதிகளவில் முதலீடு செய்து அதிக வருவாய் ஈட்டலாம் என்ற எண்ணத்தில், 13 லட்சம் ரூபாய் டெலிகிராமில் வந்த வங்கி கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பி வைத்தோம். இம்முறை வர்த்தகத்துக்கான நடவடிக்கை ஏதும் இல்லை. பலமுறை முயற்சித்தும் எவ்வித பலனும் கிடைக்க-வில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம். பணம் பெற்று ஏமாற்றி மோசடி செய்த நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலை-மையில், எஸ்.ஐ., பாரதிராஜா உள்ளிட்ட போலீசார் வங்கி கணக்கு உரிமையாளர் இருப்பிடமான பொள்ளாச்சி, கோவைக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டனர். பின்னர், பொள்ளாச்சி ஓரக்க-லியூர் மாரிமுத்து மகன் சக்தி வடிவேல், 26, கோவை காளிபா-ளையம் ராம்குமார், 54, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து நான்கு மொபைல் போன், ஒரு வங்கி பாஸ் புத்தகம், 13 செக் புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்-தனர். பகுதி நேர வேலை ஆசை காட்டி, இவர்கள் நடத்தி வந்த நிறுவனத்தின் மூலம், இந்திய அளவில் ரூ.10 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.