உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணக்கு கேட்ட கணவன் துாக்கிட்ட மனைவி

கணக்கு கேட்ட கணவன் துாக்கிட்ட மனைவி

ஈரோடு: ஈரோடு, சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவர் மனைவி இந்துமதி, 28; தம்பதிக்கு, ௧௧ மாதத்தில் குழந்தை உள்ளது. இந்துமதி ஆடம்பரமாக செலவு செய்ததால், பணத்துக்கு ஜீவானந்தம் கணக்கு கேட்டுள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்-ளது. ஏற்கனவே இருமுறை இந்துமதி துாக்கு போட முயன்றார். நேற்று முன் தினம் மாலை மீண்டும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், வழக்கம்போல் இந்துமதி படுக்கை அறைக்குள் சென்று, சேலையில் துாக்கிட்டு கொண்டார். கதவை உடைத்து மனைவியை மீட்டவர், ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை