உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இறந்த உயிரினங்களின் கழிவுகளை அப்புறப்படுத்தும் பாறு கழுகுகள்

இறந்த உயிரினங்களின் கழிவுகளை அப்புறப்படுத்தும் பாறு கழுகுகள்

பு.புளியம்பட்டி: ஆண்டுதோறும் செப்டம்பர் மாத முதல் சனிக்கிழமை, உலக பாறு கழுகுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இறந்த கால்நடைகள், காட்டு விலங்குகளை உண்ணும் வெண் முதுகு பாறுக்கழுகு, கருங்கழுத்து பாறுக்கழுகு, செம்முக பாறுக்கழுகு என மூன்று வகை கழுகுகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பவானிசாகர் வனப்பகுதி மாயாறு சமவெளியில் காணப்படுகின்றன. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பவானிசாகர் வனப்பகுதிகள் இணையும் இடமான தெங்குமரஹாடா மாயாறு வனப்பகுதி, பாறு கழுகுகளின் வாழ்விடமாக உள்ளது. இறந்த உயிரினங்களின் உடல் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் பாறு கழுகுகள் இங்கு அதிகளவில் வசிக்கின்றன. சமீப காலமாக சத்தி புலிகள் காப்பகத்தில் புதிய இடங்களில் பாறுக்கழுகுகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதன் மூலம் பாறு கழுகுகள் எண்ணிக்கை உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. ஆனால், டைக்ளோபினாக் என்னும் மருந்தால், பாறு கழுகுகள் உயிரிழக்க நேரிடுகிறது. இதை தடுக்க மருந்து கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தன்னார்வ அமைப்பினர் தெரிவித்தனர்.இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது: வலி நிவாரண மருந்தான டைக்ளோபினாக் செலுத்தப்பட்ட இறந்த மாட்டின் உடலை உண்ணும் கழுகுகள் இறக்க நேரிடுகிறது. இதை தடுக்கும் வகையில், மருந்து கடைக்காரர்கள் மற்றும் மக்கள் தரப்பில் வனப்பகுதி கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை