உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்று போக்குவரத்தில் மாற்றம்

இன்று போக்குவரத்தில் மாற்றம்

இன்று போக்குவரத்தில் மாற்றம்ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களில் இன்று கம்பம் ஊர்வலத்துடன் மஞ்சள் நீராட்டமும் நடப்பதால், மதியம், 2:00 மணிக்கு மேல் மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.* இதன்படி மதியம், 2:00 முதல் இரவு, 9:00 மணி வரை சேலம், திருச்செங்கோடு, நாமக்கலில் இருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோடு வரும் பஸ்கள், காவிரி ரோடு, கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை வழியாக திருநகர் காலனி வந்து வ.உ.சி., பூங்கா பின்புறம் பயணிகளை இறக்கிவிட்டு, திரும்பவும் காவிரி சாலை வழியாக செல்ல வேண்டும்.* கோபி, சத்தி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், பாரதி தியேட்டர் ஜங்ஷனில் பயணிகளை இறக்கிவிட்டு, வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து கோபி, சத்தி சாலையில் செல்ல வேண்டும். பவானி, அந்தியூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள், வ.உ.சி., பூங்கா பின்புறம் அசோசியேசன் பெட்ரோல் பங்க் அருகே பயணிகளை இறக்கிவிட்டு திரும்ப பவானி, அந்தியூர் செல்ல வேண்டும்.* திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் இருந்து ஈரோடு வழியாக கோவை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் காவிரி சாலை, கே.என்.கே., ஜங்ஷன், திருநகர் காலனி, மூலப்பட்டறை, அசோசியேசன் பெட்ரோல் பங்க், பீ.பி.அக்ரஹாரம், கோணவாய்க்கால், சித்தோடு பைபாஸ் வழியாக செல்ல வேண்டும்.* கோவை, திருப்பூரில் இருந்து பெருந்துறை வழியாக வரும் வாகனங்கள் பெருந்துறை சாலை, ஜி.எச்., ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி, பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பெருந்துறை சாலையில் செல்ல வேண்டும்.* தாராபுரம், காங்கேயம், கொடுமுடி, கரூர், திண்டுக்கல் மார்க்கமாக வரும் பஸ்கள் ஊர்வலம் புறப்பட்டு மணிக்கூண்டில் இருந்து ஈஸ்வரன் கோவில் சாலைக்கு திரும்பும் வரை காளை மாட்டு சிலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, ஈ.வி.என்.சாலை, ஜி.எச்., ரவுண்டானா, வாசுகி வீதி வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். ஊர்வலம் காமராஜர் வீதியை அடைந்ததும் காளை மாட்டு சிலையில் இருந்து பி.எஸ்.பார்க், மணிக்கூண்டு வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.* கோவையில் இருந்து ஈரோடு வழியாக திருச்செங்கோடு, சேலம், நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள், பெருந்துறை சாலை, திண்டல் கபே - ரிங்ரோடு வழியாக வலது புறம் திரும்பி ரங்கம்பாளையம், ஆணைக்கல்பாளையம், பரிசல்துறை நால் ரோடு வழியாக பள்ளிபாளையம் செல்ல வேண்டும்.* இதர இலகு ரக வாகனங்கள் கம்பம் வரும் வழிகளை தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்தலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை