உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் கன மழை

ஈரோட்டில் கன மழை

ஈரோடு, ஈரோட்டில் நேற்று காலை, வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாலை, 5:45 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. பின், மிதமான வேகத்தில் உருவெடுத்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. பன்னீர்செல்வம் பார்க், மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, மூலப்பாளையம், சென்னிமலை ரோடு என மாநகரின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.இதனால், வீரப்பன்சத்திரம் மணிக்கூண்டு, ஆர்.கே.வி ரோடு, ரயில் நிலைய ரோடு, மீனாட்சி சுந்தரானார் சாலை, கொங்கலம்மன் கோவில் வீதிகளில் மழைநீர் தேங்கியது. 6:45 மணிக்கு மழை நின்றதும், சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்தது. மற்றபடி பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் இல்லை. மாலை நேரத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதித்தது. ஒரு வாரத்திற்கு பிறகு பெய்த மழையால், குளிர்ந்த நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை